5 General news in Tamil
1. இனி நெட்வொர்க் பிரச்சனை முழுவதுமாக கிடையாது.
ஐபோன்(iphone) மற்றும் பல ஆண்ட்ராய்டு(Android) தற்போது 5ஜி(5G) சப்போர்ட் உடன் மொபைல் போன்களை(Mobile phone) விற்பனை செய்து வருகிறது.
ஆனால், ஐ போனில்(iphone) உள்ள தனித்துவமான அம்சங்களுக்கு ஆகவே பெரும்பாலானோர் ஐபோனை விரும்பி வருகின்றனர். மேலும், தற்போது வெளியான ஐபோன் 12(iphone 12) மாடல் முதல் 5ஜி இணைப்புடன் வெளியாகி வருகிறது.
மேலும், அடுத்து வரும் ஐபோன் 13(iphone 13) முதல் தனித்துவமாக, நெட்வொர்க் ஐ, நேரடியாக எல்.இ.ஓ சேட்டிலைட்(L.S.O - satellite) உடன் இணைக்க உள்ளது. இதன் மூலம் எந்த இடத்திலும் நெட்ஒர்க் ஆனது தடையில்லாமல் செயல்படும்.
மேலும் முக்கியமாக, பாரதி ஏர்டெல்(AirTel) ஆதரவுடன் செயல்படும் ஒன்வெப்(One web) நிறுவனமும் எதிர்காலத்தில் இதனை செயல்படுத்த உறுதியாக உள்ளது. எனவே 5ஜி ஆனது சிறிது காலத்திற்குள் தடையின்றி எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
2. பாதாமில் உள்ள மிக முக்கிய நன்மைகள்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளில் சக்தி வாய்ந்தது பாதாம் ஆகும். மேலும், இவற்றில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், மற்றும் தாதுக்கள், போன்ற நிறைய ஊட்டச்சத்து பொருட்கள் காணப்படுகிறது.
முக்கியமாக பாதாம் ஆனது பெரும்பாலும் பாதிக்கப்படும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், போன்றவற்றை குறைக்கிறது.
மேலும், மலச்சிக்கல், சுவாசக் கோளாறு, ரத்தசோகை, போன்றவற்றிலும், முடி, தோல், போன்றவற்றை பராமரிப்பதற்கும், நல்லதாக கருதப்படுகிறது.
ஒருநாள் உணவுடன், அன்றாடம் 45 கிராம் பாதாம் சேர்ப்பதன் மூலம், இந்த பலன்களை பெறலாம்.
3. மதுபான கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.
டாஸ்மாக்கில்(Tasmac) மதுபானம் வாங்குபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் மட்டுமே, மதுபானம் கொடுக்க வேண்டும்.
இது தொடக்கமாக நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. சியோமி(Xiaomi) நிறுவனத்தின் அதிரடியான புதிய தொடக்கம்.
பொதுவாகவே, ஆட்டோமொபைல்(Automobiles) நிறுவனங்கள் தான், எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முற்படுவர், ஆனால், சீனாவில் டெக்(Tech) நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை(Electric vehicle) தயாரிக்க பெரும் ஆர்வம் காட்டி வருகின்றது.
ஸ்மார்ட் போன்(Smart phone) மற்றும் எலெக்ட்ரிக்(Electric) பொருட்களை தயாரித்து வந்த, சியோமி(Xiaomi) நிறுவனம் தற்போது ஆட்டோமொபைலின், நிலையை அறிந்து புதிதாக எலக்ட்ரிக் வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க உள்ளது.
எனவே, சியாமி(Xiaomi) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான, லேய் ஜூன்(Lei jun) எலக்ட்ரிக் வாகன பிரிவின் வர்த்தகத்தில் இறங்குவதற்காக புதிதாக சியோமி இ.வி இன்க்(Xiamoi E.V.INC) என்ற பெயரில் ஒரு கார் நிறுவனத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. பொதுமக்களுக்கு வங்கி சேவை மற்றும் பிற சேவைகளுக்கான முக்கிய அறிவிப்பு.
ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் வங்கிச் சேவை மற்றும் பலவகையான சேவைகளுக்கு, பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க அரசு பல மாதங்களாக கட்டாயப்படுத்தி வருகிறது.
எனவே விரைவில் ஆதார் எண்ணையும் பான்கார்டு எண்ணையும் இணைக்கவும்.
வீட்டிலிருந்தபடியே இணைப்பதற்கான முழு விளக்கமும் கீழே உள்ளது.
No comments:
Post a Comment