1. Child Health news
குழந்தைகளும், மாஸ்க் அணிய வேண்டுமா??-உலக சுகாதார அமைப்பு.
1. கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகமெங்கும், சமூக இடைவெளி, கைகழுவுதல், முகக்கவசம் அணிதல்,போன்றவற்றினால் ஓரளவு தொற்றை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
2. மேலும், 5வயது வரை உள்ள குழந்தைகள் முக கவசம் அணிவது அவசியம் இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு மட்டுமே முக்கியம். மற்றும் அக்குழந்தைகள் முகக்கவசம் அணிவதனால் எந்த பயனும் இல்லை.என்றும்,
3. 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது.
2. California fire accident
அமெரிக்கா, கலிபோர்னியாவில் (California) ஏற்பட்ட பெரும் தீ விபத்து.
![]() |
California fire accident |
1. உலகெங்கும் மனிதன் அல்லது பிற உயிரினங்கள் மற்றும் இயற்கை போன்றவை, ஏற்படும் தீய செயல்களினால் பனிப்பாறை உருகுதல், காட்டுத் தீ, போன்ற பல வகையான இயற்கை சீற்றங்களால் உலகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
2. இதனால், கலிபோர்னியாவில் கடந்த 7 நாட்களுக்குள், பத்து லட்சம் ஏக்கர்கள் காட்டுத்தீயினால் எரிந்துள்ளது. என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3. இந்த காட்டுத் தீயினால் ஐந்து பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர், அவர்களின்
வீடுகளை இழந்துள்ளனர்.
4. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி(15/08/2020) முதல் இந்த காட்டுத் தீ பரவி வருகிறது. இதனை எதிர்த்து 13ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
3. Movie shooting
திரைப்படங்கள் எடுக்கும் பணிகள் தொடக்கம்.
![]() |
Movie shooting |
1. கொரோனா தொற்று காரணமாக, சில மாதங்களாக தடைபட்டிருந்த திரைப்பட படப்பிடிப்பு மீண்டும் பல நெறிமுறைகளின் கீழ் துவங்கியுள்ளதாக, மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
2. முக்கிய சில நெறிமுறைகள்:-
- முகக்கவசம் சமூக இடைவெளி கை கழுவுதல் போன்றவை அவசியமாகும்.
- நடிக்கும் நபர் கேமரா முன் மட்டும் போக கவசத்தை கழட்ட வேண்டும்.
- படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
- குறைந்த பணியாளர்களை கொண்டே படப்பிடிப்பு எடுக்க வேண்டும்.
4. New education policy
புதிய கல்வி கொள்கைகளில், ஆசிரியர்களின் கருத்து.
![]() |
New education policy |
1. இந்தியாவில், கடந்த ஜூலை 29ம் தேதி(29/07/2020) முதல், புதிய கல்விக் கொள்கைகளை அரசு அமல்படுத்தியுள்ளது.
2. இது பலரிடையே எதிர்ப்புகளையும், பலரிடையே வரவேற்புகளையும், பெற்றுள்ளது.
3. எனவே, 31 தேதி(31/08/2020) முதல் ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை அளிக்கலாம். அதனை பொறுத்து, அரசு புதிய கல்விக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5. What is Hall of fame.
கிரிக்கெட் போட்டியில், "ஹால் ஆஃப் போஃம்" என்றால் என்ன?. இது யாருக்கு தரப்படுகிறது?.
1. உலகில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி(ICC) மூலம் வழங்கப்படும் விருது ஹால் ஆஃப் பேஃம்(Hall of fame) என்பதாகும்.
பேட்ஸ்மேன்(Batsman) வீரராக இருந்தால், இருக்கவேண்டிய தகுதி:-
- டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 8ஆயிரம் ரன்கள் அடித்து இருக்க வேண்டும்.
- மொத்தம் 20 சதங்கள் அடித்து இருக்க வேண்டும். அல்லது பேட்டிங் சராசரி 50% க்கு மேல் இருக்க வேண்டும்.
பவுலர்(Bowler) ஆக இருந்தால், இருக்க வேண்டிய தகுதிகள்:-
- ஒரு நாள் அல்லது டெஸ்ட் தொடர்களில் மொத்தம் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்க வேண்டும்.
- டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களுக்கும், ஒருநாள் போட்டிகளில் 30 விக்கெட்டுகளுக்கும், குறையாமல் வீழ்த்தி இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment