1. WHO - corona virus
கொரோனா வைரஸை எப்போது முடிவுக்கு கொண்டுவர முடியும் - உலக சுகாதார அமைப்பு(WHO).
1. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல மாதங்களுக்கு முன்பு இருந்து, அனைவருக்கும் வேலைஇழப்பு, உயிரிழப்பு, வறுமை, போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
2. மேலும், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளும், தடுப்பதற்கான நடவடிக்கைகளும், உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.
3. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு(WHO) கொரானா வைரஸை, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும் என உறுதி அளித்துள்ளது.
2. Rain warning in Tamilnadu
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
![]() |
Rain warning in Tamilnadu |
1. தமிழகத்தில், நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சூழல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக, மழைக்கு வாய்ப்பு உள்ளதாக(Rain warning in Tamilnadu) சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
2. வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3. Interstate transport
மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து - மத்திய உள்துறை அமைச்சகம்.
1. கொரோனா தொற்று காரணமாக, மாவட்டங்களுக்கு இடையே இருந்த போக்குவரத்து சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மிக முக்கியமாக உள்ளது.
2. மாநிலங்களுக்கு இடையே தடை செய்யப்பட்டுள்ள போக்குவரத்து காரணமாக, நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மற்றும் பலவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
3. எனவே, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல(Interstate transport), தடை இல்லை.என்றும், இபாஸ்(ePass) தேவை இல்லை. என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசிற்கும் கடிதம் எழுதியுள்ளது.
4. Soorarai pottru movie.
சூரரை போற்று தமிழ் திரைப்படம் வெளியீடு.
1. சூரரைப் போற்று(Solrathai pottu) என்னும் தமிழ் திரைப்படம், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, மற்றும் அபர்ணா பாலமுரளிதரன், ஜோடியாக நடிக்கும் இப்படம், கொரோனா தொற்று காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் வெளியாகவில்லை.
2. எனவே, இதனை அடுத்து 153 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படமானது, அமேசான் பிரைம் வீடியோ(Amazon prime video) இல், ஆகஸ்ட் 30-ம் தேதியன்று(30/08/2020), வெளியாகவுள்ளது.
5. Cricket news
சர்வதேச கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் பிசிசிஐ தலைவர்.
1. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு எந்த கிரிக்கெட் போட்டிகளும்(Cricket match), இந்தியாவில் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. மேலும், ஐபிஎல்(IPL) போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் முடிந்தபின் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடும்.
3. பின்னர், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
4. மேலும், உள்ளூர் போட்டிகள் நடை பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Nice
ReplyDelete